Saturday, November 02, 2019

சமத்துவமே மாணவ மூச்சு!

இந்தமதம் அந்தமதம் இந்தசாதி அந்தசாதி
என்றெல்லாம் பார்க்காமல் ஒன்றுபட்டுக்
கற்கின்றோம்!
எங்களை  நாளும்  மதங்களால் சாதிகளால்
புண்படுத்திப் பார்க்கும் வக்கிரங்கள் தேவையில்லை!
இந்தத் திருநாட்டில் நாங்கள் சமத்துவத்தை
முன்னிறுத்தி வாழ்வோம்! சாதிமத பேதமென்னும்
வஞ்சகத்தைப் பந்தாடக் கூடுவோம்
சூளுரைப்போம்!
நெஞ்சம் நிமிர்வோம் திரண்டு.

மதுரை பாபாராஜ்





0 Comments:

Post a Comment

<< Home