Saturday, November 02, 2019

இயற்கையை வெல்தல் அரிது

இயற்கையை வெல்தல் அரிது!

பூக்களைத் தூவுகின்றார்! பூசையைச் செய்கின்றார்!
தாக்கவரும்  வெள்ளத்தின் சீற்றம் தணிவதற்கே
கூடிநின்று அந்த நதியை வழிபட்டும்
தேடிவரும் வெள்ளப் பெருக்கு பெருகிவர
ஓடுகின்றார் இங்கே கரையோர மக்களெல்லாம்
பாதுகாப்பாய் வாழ்வதற்கு வேறிடம் போங்களென்றார்!
பூசைகள் செய்தாலும் என்னென்ன செய்தாலும்
சீறிவரும் வெள்ளம் இயற்கை இயல்பு
மாறாது மாறா துணர்.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home