பெரியவர்!
பெரியவர் சிங்கம்போல் உட்கார்ந் திருப்பார்!
பரபரப்பாய் வீட்டில் பணிகள் நடக்கும்!
வருவோரும் போவோரும் கண்கொள்ளாக் காட்சி!
விருட்டென்று போகும் பொழுது!
ஊர்மக்கள் நாள்தோறும் தேடி வருவார்கள்!
வாழ்க்கை நடப்புகளை சிக்கலைச் சொல்வார்கள்!
ஆழ்ந்தேதான் சிந்திப்பார்! தேவையான நல்லறத்தை
காய்தல் உவத்தலின்றி தீர்வாகச் சொல்லியதும்
ஊர்மக்கள் செல்வார்கள் ஏற்று.
சிங்கம்போல் அங்கிருந்த பண்புப் பெரியவர்
இன்றில்லை! வீடிருந்தும் அந்தப் பரபரப்போ
வந்து போகும் மக்கள் நடமாட்டம்
இன்றிக் களையிழந்த கோலத்தைப் பார்க்கின்றார்!
மண்ணக வாழ்வின் இயல்பு.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home