Friday, January 03, 2020

நிர்வாகப் பண்புகள்

சிறந்த நிர்வாக ஆற்றல்!

EFFICIENT MANAGEMENT!

சொல்வதைப் புண்படுத் தாமல் எடுத்துரைக்கும்
நல்ல அணுகுமுறை நிர்வாக ஆற்றலாகும்!
உள்ளம் துடிக்க உரைப்பதோ நல்லதல்ல!
உள்ளதை உள்ளபடி்சொல்.

மனித வளம்

HUMAN RESOURCE

மனிதவளம் இன்றி இயக்கம் கடினம்!
கணிக்கவேண்டும் எந்தத் துறைக்கு நாளும்
மனிதர்கள் எத்தனைபேர் வேண்டும் என்றும்
வருமானம் எவ்வளவு என்றும் கணித்து
நியமனம் செய்யவேண்டும் இங்கு.

வருகைப் பதிவின் அடிப்படையில் பார்த்து
தரவேண்டும் சம்பளம் மாதம் முழுதும்!
அவரவர் சம்பளத்தை வங்கியில் சேர்த்து
தவறின்றிக் காட்டவேண்டும் சாற்று

ஆவணம் முக்கியம்!

DOCUMENTATION!

எதையும் எழுதிவைத்தே ஆவண மாக்கும்
நடைமுறையில்   நிர்வாக ஆற்றல் மிளிரும்!
எதையும் எழுதாமல்  வாய்மொழி யாக்கும்
நடைமுறையே சிக்கலின் வேர்.

நிர்வாகம் ஊழியர் ஒற்றுமையாய் உள்ளவரைத்
தொய்வின்றிப் போகும்! மனதிலே வேற்றுமை
மொய்த்தால் அனைத்தும் தவறாய்த் தெரியும்!
மெய்சாட்சி ஆவணந் தான்.

தொழிலுறவில் இணக்கம்!

INDUSTRIAL HARMONY!

ஊழியர் நிர்வாகக் கூட்டணி ஒற்றுமையே
நேர்ப்படுத்தும் இங்கே இணக்கமான சூழ்நிலையை!
விட்டுக் கொடுக்கும் விவேகம் இணக்கத்தைக்
கற்றுக் கொடுக்கும் உணர்.

நிர்வாகம் ஊழியர்  ஒற்றுமை  வேரிலே
தொய்வின்றி வேற்றுமை வென்னீரை ஊற்றினால்
முற்றிலும்  நல்ல தொழிற்சாலை பட்டுவிடும்!
பட்டுவிட்டால் எல்லோர்க்கும் தாழ்வு.

கொள்முதல் துறை

PURCHASE DEPARTMENT

நாள்தோறும் உற்பத்தி செய்யும்  அளவுகளின்
தேவைக்கு ஏற்றவாறு கச்சாப் பொருள்களும்
தேவையான மற்ற பொருள்களும் கொள்முதல்
செய்வதே இந்தத் துறை.

விற்பனைக் குழு!

SALES TEAM

அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:517

உற்பத்தி யாகும் பொருட்களை நாள்தோறும்
விற்பனை செய்வதற்கு ஏற்ற குழுவை
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் குறள்போல்
பதமாகத் தேர்ந்தெடுக்கப் பார்

வாடிக்கையாளர் திருப்தி!

CUSTOMER SATISFACTION

வாடிக்கை யாளர் தொழிலின் முதுகெலும்பாம்!
வாடிக்கை யாளர் திருப்தியோ உற்பத்தி
யாகும் பொருளின் தரம்விலை  சார்ந்ததே!
கூடுகட்டும் பேராண்மை இஃது.

தரமான பொருட்கள்!

QUALITY PRODUCTS!

செலவினத்தைக் கட்டுப் படுத்திப் பொருளின்
தரத்தை நிலைநிறுத்தி உற்பத்தி செய்து
பெருமுயற்சி செய்தால்  தொழிலும் வளரும்!
பெருகிவரும் விற்பனை தான்.

குழுஉணர்வு!

TEAM SPIRIT!

குழந்தை உணர்வே குழுவின் உணர்வாய்
மலர்ந்து மணம்பரப்பும் மாசற்ற தன்மை
வளர்ந்தால் வசப்படும் சாதனை வெற்றி!
குழந்தை மனமே உயர்ந்த மனந்தான்!
குழந்தை மனம்கொள்! குழந்தைத் தனம்தள்!
குழுஉணர்வே நிர்வாகத் தூண்.

நேர மேலாண்மை!

TIME MANAGEMENT!

குறித்தநேர உற்பத்தி வாடிக்கை யாளர்
குறித்தநேரந் தன்னில் நிறைவேற்றும் பண்பு!
செறிவான நேரமேலாண் மைக்குதான் சான்று!
நெறியொழுக்கப் பண்புக்கு வித்து.

நேரந்தவறாமை!

PUNCTUALITY!

குறிப்பிட்ட நேரம் குறித்த இடத்தில்
பொறுப்புடன் செல்தல் தனிமனிதப் பண்பு!
சிறிய பணியோ பெரிய பணியோ
குறித்தநேரந் தன்னை மதிக்கவேண்டும் நாளும்!
குறித்தநேரம் விட்டேதான் தமதமாய்ச் செல்லும்
நெறிபிறழ்வு நல்லதல்ல இங்கு.

முந்திவந்து காத்திருத்தல் ஏற்புடைய பண்பாகும்!
பிந்திவந்து காரணம் சொல்தல் சரியல்ல!
சென்றநேரம் மீண்டும் கிடைக்காது! காலத்தைப்
பொன்போல் கருதவேண்டும் நாம்.

மதுரை பாபாராஜ்

குறள்நெறிக் குரிசில்
சி.இராஜேந்திரன்
வீஓவி நிர்வாகி

அருமை பாபா.. என்ன மேலாண்மை இயக்குநர் ஆயிட்டீங்க 👍💐😁

கவிஞர். மெய்ஞானி பிரபு. வீஓவி

சிறந்த நிர்வாக மேலாண்மை / தரக்கட்டுப்பாடு / மனித வளம் / நேர மேலாண்மை.... என அனைத்தையும் கவிதைப்படுத்திவிட்டீர் !
மிக அருமை 👍👏



0 Comments:

Post a Comment

<< Home