Tuesday, March 31, 2020

சுங்க அலுவலர் திருக்குறள் ஆர்வலர்
திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு
வாழ்த்துப்பா!

உன்னி கிருஷ்ணன் பிறப்பால் மலையாளி!
செந்தமிழ்க் கோவை நகரில் பிறந்தவர்!
கண்போல் கருதிப் படித்தார் தமிழ்வழியில்!
தன்மொழி யான மலையாளம் நன்கறிவார்!
பன்மொழி ஆற்றலை வாழ்த்து!

சுங்கத் துறையில் பணிசெய்து கொண்டேதான்
அஞ்சல் வழியிலே பட்டப் படிப்புதனை
நன்கு நிறைவுசெய்தார்! சுங்க அலுவலகம்
தந்த கணினித் துறையில் பணிக்களம்!
நண்பரின் சாதனை முத்திரைக்குச் சான்றாக
இந்திய நாட்டின் ஜனாதிபதி சான்றிதழைத்
தந்தது வாழ்நாள் பெருமை மகுடமென்றே
எண்ணுகின்றார் உன்னி கிருஷ்ணன் நெகிழ்ந்தேதான்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

வள்ளுவர் கூட்டுக் குடும்ப நெறியாளர்
வல்லவர் ராசேந்திரனார் நண்பர்! அசோகனுடன்
சுங்க முரசிதழைச் சேர்ந்து நடத்தியவர்!
பண்பட்ட கட்டுரை தந்த எழுத்தாளர்!
நம்குழுவில் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்!
பண்பாளர் ஆற்றலை  வாழ்த்து.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் குறள்தான்
மனதைக் கவர்ந்த குறளாகும்! இந்தக்
குறளைத்தான் மின்னஞ்சல் தன்பெயரின் கீழே
சிறப்பாக வைத்துள்ளார் வாழ்த்து.

இல்லறத்தில் நல்லறத்தைப் போற்றும் மனைவியும்
நல்ல பொறியாளர் பட்டத்தை வென்றேதான்
தேர்ந்து தனியார் நிறுவனத்தில் சேர்ந்துள்ள
ஆர்வமிகு மைந்தனும் மங்கலமாய் வாழ்கின்றார்!
நல்லதோர் நற்குடும்பம்  பல்கலைக் கூடமாகும்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.

மதுரை பாபாராஜ்

உன்னிகிருஷ்ணன்..

பின்புலத்தில் இருந்து செயலாற்றுபவர்...

தமிழின் மாண்பு போற்றி குறள் நெறியில் வாழ்பவர்..

நலம் விளைக... நலமே விளைக

சி ராஜேந்திரன்
மிக்க நன்றி ஐயா!

இது, ஒரு விதமான இன்ப அதிர்ச்சி!

"நானே நானோ யாரோ தானோ..."

என்னைப் பற்றி எழுதியதை, நானே படித்தல் என்பதை, தன்னை அறிவதற்கான ஒரு மாற்று வழி என்றே எண்ணுகிறேன்.

எனக்கு எழுத்து அறிவித்த்வர்களுக்கும், என் எழுத்தை அரங்கேற்றியவர்களுக்கும், என்னை அறிமுகப்படுத்தி வாழ்த்துப்பா பாடிய உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🏻
உன்னி கிருஷ்ணன்








0 Comments:

Post a Comment

<< Home