இலக்கியக் காட்சி!
முத்தொள்ளாயிரம்!
ஆண்டு 1985 நூல்: மகரவிளக்கு
பாடல். எண் குறிப்பிடவில்லை
மன்னவன் தன்னை என்றன்
மலர்விழி கண்ட துண்மை!
அன்பினைச் சிந்தும் உள்ளம்
அரசனை யணைத்த துண்மை!
என்னெழில் தோளி ரண்டும்
ஏந்தலைத் தழுவிக் கொண்டு
இன்புறும் நிலையில் என்றும்
இருந்ததே இல்லை தோழி!
கண்டன கண்கள்! ஓடிக்
கலந்ததே உள்ளம்! ஆனால்
தண்டனை தனிலி இருந்து
தப்பின இவையி் ரண்டும்!
பெண்மணித் தோளி ரண்டும்
பொலிவிழந் தனவே தோழி!
தண்டனை தன்னை மன்னன்
தளிர்தோ ளுக்க ளித்தான்!
மதுரை பாபாராஜ்
முத்தொள்ளாயிரம்!
ஆண்டு 1985 நூல்: மகரவிளக்கு
பாடல். எண் குறிப்பிடவில்லை
மன்னவன் தன்னை என்றன்
மலர்விழி கண்ட துண்மை!
அன்பினைச் சிந்தும் உள்ளம்
அரசனை யணைத்த துண்மை!
என்னெழில் தோளி ரண்டும்
ஏந்தலைத் தழுவிக் கொண்டு
இன்புறும் நிலையில் என்றும்
இருந்ததே இல்லை தோழி!
கண்டன கண்கள்! ஓடிக்
கலந்ததே உள்ளம்! ஆனால்
தண்டனை தனிலி இருந்து
தப்பின இவையி் ரண்டும்!
பெண்மணித் தோளி ரண்டும்
பொலிவிழந் தனவே தோழி!
தண்டனை தன்னை மன்னன்
தளிர்தோ ளுக்க ளித்தான்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home