Monday, June 01, 2020

அய்யா வணக்கம்.

கவிஞர்
ஞால ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து.


கவியரங்கம் பட்டிமன்றந் தன்னில் கலந்து
புவியில் தமிழ்மணக்க வைக்கும் கவிஞர்!
கவிதை உறவு விருதில் தொடங்கி
கவிமா மணிவிருது போன்று பலவும்
ரவிச்சந் திரனாரின் சாதனை யாகும்!
கவிதைத் துளிகள் சமுதா யத்தின்
இழிவைப் புரட்டும்
நெம்புகோ லாகும்!
செழிப்புடன் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home