Tuesday, August 18, 2020

தமிழியலன் அவர்களுக்குப் பாராட்டு

 பன்முக ஆற்றலாளர் தமிழியலன் அய்யாவுக்குப் பாராட்டு


18.08.2020. செவ்வாய்க் கிழமை


ஏற்பாடு: 

பாரதி பாரதிதாசன் கவிதை அமைப்பு


மின்துறையில் ஆளுமையைக் காட்டி நிறைவுசெய்து

பன்முக ஆற்றலில் இன்றோ இயங்குகின்றார்!

நம்பிக்கை மூலதன மாகவே நாள்தோறும்

எண்ணற்ற சாதனை முத்துகளைச் சேகரித்து

நன்னெறியில் வாழ்பவரை வாழ்த்து.


பாரதி பாரதி தாசன் அமைப்பினர்

பாராட்டுப் பேரரங்கை நன்கு நடத்திவிட்டார்!

பாவரங்கம் வாழ்த்தரங்கம் மற்றும் உரையரங்கம்

காணவைத்தார் வாழ்கவென்று வாழ்த்து.


தமிழை இயல்பாகப் பேசிக் கவரும்

தமிழியலன் அய்யாவின் பன்முக ஆற்றல்

இமையாகும் தொண்டுக்கும் தமிழுக்கும் 

என்றும்!

தமிழ்போல வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home