பதவி உயர்வு
வாழ்வில் படிப்படியாய் பதவி உயர்வு!
சிறுவயதில் தம்பியென்பார்! இங்கே இளமை
முறுக்கேறும்! அண்ணனென்பார்! ஆண்டுகள் போகும்
நடுத்தரத் தோற்றத்தில் அப்பாவாய் ஆவோம்!
கடந்துசெல்லும் அந்தப் பருவம்! முதுமை
தடம்பதிக்கும் எல்லோர்க்கும் தாத்தாதான் இங்கே!
இதுபோல தங்கை தொடங்கித்தான் பாட்டி
பதவிகள் பெண்களுக்கும் உண்டு.
நண்பர் சுரேஷ் கருத்து
இப்பதவி உயர்வுக்கு,
கையூட்டில்லை,
கட்டாயம் அட்டவணை இல்லை,
சாதி வரிசையுமில்லை,
கூடவே உயர்படிப்பும் தேவையில்லை...
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home