Saturday, October 17, 2020

திருமதி.ரம்யா நாராயணன் வாழ்த்து

17.10.20 திருமதி.ரம்யா நாராயணன்திவ்யஸ்ரீ

 தஞ்சை நகரிருந்து அம்மா பிறந்தநாளில்

அன்புடன் ரம்யா

 நகரும் படமனுப்பி

எங்களை வாழ்த்திய

பண்பில் மகிழ்கின்றோம்!

நன்றி நவில்கின்றோம் சேர்ந்து.

மதுரை பாபாராஜ்

இல்லத்தரசி வசந்தா பாபாராஜ் பிறந்தநாள் வாழ்த்து

17.10.20 வயது 66/67

இந்தப் பிறவியில் இல்லறத்தில் நல்லறத்தைக்

கண்ணும் கருத்துமாய் நாளும் நிறைவேற்றும்

அன்புக் கடமையின்  முன்னணியில் நிற்பவராம்!

என்றும் விருந்தோம்பல் பக்குவத்தால் சுற்றத்தார்

வந்து மகிழ்கின்றார்! வாழ்க்கை தொடர்கிறது!

அன்பு மணக்கின்ற வாழ்வு.


எல்லோரும் வாழ்த்திசைக்க பல்லாண்டு வாழியவே!

வள்ளுவத்தைப் போற்றியே வாழ்வாங்கு வாழியவே!

உள்ளம் மகிழ்ந்திருக்க வல்லமை கொண்டேதான்

பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home