பிடிமானம்
பிடிமானம்!
பிடிமானந் தன்னைப் பிடித்துப் பிடித்துப்
படிப்படி யாக நடைபயின்று வந்தோம்!
பிடிமானம் இன்றி நிமிர்ந்து நடக்கும்
மகிழ்ச்சிப் பருவம் வளரும் குதிப்போம்
தெறித்தேதான் ஓடுவோம் எல்லாம் முடியும்!
முதுமைப் பருவம் வளர வளரப்
பிடிமானம் வாழ்வில் கழன்றே விலகும்!
பிடிமானந் தன்னைத் தொட்டுத் தடவும்!
பிடிமானம் மீண்டும் தேடுகின்ற வாழ்க்கை!
தடுமாறும் தள்ளாடும் தத்தளிக்கும் நொந்து!
பிடிமானம் நாடும் முடிவு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home