Saturday, October 17, 2020

திருக்குறள் இன்பத்துப்பால்( குழந்தைகளுக்காக

[10/17, 8:24 PM] Dr. Balamurugan: https://youtu.be/0Dk8qXshOKU

: திருக்குறள் இன்பத்துப்பால்( குழந்தைகளுக்காக


)

நூல் வெளியீடு


ஏற்புரை. 17.10.20


சான்றோர் தளம்:


சான்றோர் அணிவகுக்கும் சான்றோர் தளத்திலே

வான்புகழ் வள்ளுவரின் முப்பாலில் ஒன்றான

தேன்சுளை இன்பத்துப் பாலைக் குழந்தைகள்

வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டேதான்

ஆர்வமுடன் பாமாலை நான்தொடுத்தேன் அம்மாலை

நூல்வடிவில் வந்ததே இன்று.

தலைமை குறள்நெறிக்குரிசில்

வள்ளுவப் பார்வை அனைத்தும் இவர்பார்வை! 

வள்ளுவத்தை நன்கறிந்த ராசேந்ரன் 

பண்பாளர்

தெள்ளத் தெளிவாய்த் தலைமையை ஏற்றளித்தார்!

வல்லவரை வாழ்த்துகிறேன் இங்கு.

முன்னிலை திரு தமிழியலன்

பண்புடை முயற்சி!

இலக்கணச் சுத்தமாய் வெண்பா படைக்கும்

உளங்கவர்ந்த நண்பரோ முன்னிலை ஏற்றார்!

உளங்கனிய பண்புடை முயற்சி தலைப்பிலே

தரமான நற்கருத்தை நூலுக்குத் தந்துள்ளார்!

களங்களில் பன்முக ஆற்றல் மிளிரும்

தமிழியலன் வாழ்க மகிழ்ந்து.

மின்நூல் வெளியீடு:

முனைவர் பாலமுருகன்:

பார்த்தால் படிப்பதற்குத் தூண்டுகின்ற மின்நூலை

ஆர்வம் ததும்பும் தொழில்நுட்ப ஆற்றலுடன்

பால முருகன் படைத்தளித்தார் வாழ்த்துகிறேன்!

நூலை வெளியிட்ட தகைமையை  நன்றியுடன்

வாழ்த்துகிறேன் வாழ்க மகிழ்ந்து.

வாழ்த்துரைகள்:

குறள் இனிது சோம வீரப்பன்

வள்ளுவர் கூட்டுக் குடும்பத்தில் சேர்த்தவர்!

வள்ளுவத்தை நிர்வாகப் பண்புடன் ஒப்பிட்டு

இந்து தமிழில் எழுதிய வல்லவர்!

நண்பர் திருச்சி திருவரங்கம் சார்ந்தவர்!

அன்பும் அடக்கமும்  கொண்டவர் வாழ்த்தினார்!

நன்றி நவில்கின்றேன் நான்.


நற்றமிழ் செ.வ.இராமாநுசன்

அணிந்துரை வாழ்த்துரை

செந்தமிழில் பேசியே செம்மாந்து வாழ்பவர்!

நற்றமிழ் ராமா நுசனார் அணிந்துரையும் வாழ்த்துரையும்

தக்க துணையாகும் ஆக்கபூர்வ ஊக்கமாகும்!

நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

நூல்வெளியிட்டுச் சிறப்புரை:

முனைவர் சங்கர சரவணன்

துணை இயக்குநர் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.

நெல்லை ஜெயந்தாவின் தம்பி! தமிழ்த்தும்பி!

பல்வேறு ஆற்றல் களங்களுக்கு மாணவரை

வல்லவராய் மாற்றத் துணைபுரியும் சங்கரர்

வள்ளுவத்தின் இன்பத்துப் பால்நூலை

அன்புடனே

இங்கே வெளியிட்டுப் பேசினார் வாழ்த்தினார்!

தம்பியை வாழ்த்துகிறேன் நான்.

ஒருங்கிணைப்பாளர் திரு பீட்டர் ராசன்!

ஒருங்கிணைக்கும் ஆற்றலில் ஒப்பற்ற பீட்டர்

ஒருங்கிணைத்தே தொய்வின்றி நன்கு நிகழ்வை

மெருகூட்டிச் சென்ற அணுகுமுறை நன்று!

வரவேற்றுப் பேசினார் அன்பு மிளிர!

உளங்கனிந்து வாழ்த்துகிறேன் நான்.

வாய்ப்பளித்த எல்லோர்க்கும் அங்கங்கே கேட்டவர்கள்

ஆர்வலர்கள் மற்றும் முகநூலில் வாழ்த்தியோர்

நண்பர் குடும்பத்தார் எல்லோர்க்கும் நன்றியைத்

தந்தே வணங்குகிறேன் சாற்று.

DTP கதிரவன்

நண்பர் கதிரவனின் கைவண்ணம்!

காலைக் கதிரவனும் 

கலைமனக் கதிரவனும்!

விடியல் பொழுதில் கதிரவன் தீட்டும்

கதிர்வண்ணத் தாலே எழிற்கோலம் காண்போம்!

கதிரவனின் கைவண்ணம் அட்டை அழகை

ரசிக்கத்தான் தூண்டுதே சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home