Tuesday, October 06, 2020

நேரவிரயம்

 ஊடக யூகங்கள் நேரவிரயம்!


இவரென்ன சொல்வார்? அவரறிய மாட்டார்!

அவரென்ன சொல்வார்? இவரறிய மாட்டார்!

எவரெவரோ ஊடகத்தில் கூடித்தான் பேசும்

பரபரப்பில் நாளும்  பொழுதுபோக்கும் கால

விரயத்தை என்னென்பேன் நான்?


பேசியோர் பேசிய பின்னால் கருத்துரைத்தால்

பேசுவதைக் கேட்டுத் தெளியலாம் இங்குதான்!

பேசாத பேச்சையே பேசுவதாய்க் கற்பனையில்

பேசுவது தேவையா சொல்?


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home