தந்தை முத்துசுப்பு நினைவுநாள்
தந்தை தெய்வத்திரு. சு.பெ.முத்துசுப்பு அவர்களின் நினைவு நாள்!
11.11.2020
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயலென்றார் வள்ளுவர்!
உங்கள் கடமைகளை எங்களுக்குச் செய்ததால்
எங்களின் இன்றைய வாழ்க்கை நடக்கிறது!
நன்றியுடன் வாழ்கின்றோம் இங்கு.
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடினென்றார் அய்யன்!
புகழுடன் இன்றும் அனைவரும் பேசும்
மகத்துவம் கேட்கின்றோம் இங்கு.
நேர்மையும் வாய்மையும் உள்ளத்தில் தூய்மையும்
வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்திருந்த பண்பாளர்!
ஆழ்மன அன்புடன் என்றும் வணங்குவோம்!
வாரிசுகள் ஆனதே பேறு.
லெட்சுமி முத்துவீரன
மதுரை பாபாராஜ் வசந்தா
ராஜபாக்கயம் ஜோதிகுமார்
கெஜராஜ் மல்லிகா
குடும்பத்தார் அனைவரும்
0 Comments:
Post a Comment
<< Home