Friday, December 11, 2020

21 தீவினையச்சம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

21. தீவினையச்சம்

குறள் 201:

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செறுக்கு.

தீயவர்கள் தீயசெயல் செய்வதற்கு அஞ்சமாட்டார்!

குறள் 202:

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

தீயசெயல் தீமை தருவதால் செய்வதற்கோ

தீயினும் கேடென்றே அஞ்சு.

குறள் 203:

அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்குஞ் செய்யா விடல்.

கெடுதி புரிந்தால் கெடுதிசெய் யாமல்

இருக்கும் அறிவே சிறப்பு.

குறள் 204:

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும் கெடுதிசெய்தல் தீதாகும்! செய்தால்

அறமுன்னைத் தண்டிக்கும் கூறு.

குறள் 205:

இலனென்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றுப் பெயர்த்து.

வறுமையால்   தீயவை செய்யாதே செய்தால்

வறுமையே வாட்டும் தொடர்ந்து.

குறள் 206:

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

தீச்செயல் தன்னை வருத்துமென்றால் அச்செயலை

மாற்றார்க்கும் செய்தல் தவிர்.

குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென் றடும்.

கணைபோன்ற நேர்ப்பகைக்குத் தப்பலாம்! தீய

வினைப்பகைக்குத் தண்டனை உண்டு.

குறள் 208:

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயா தடியுறைந் தற்று.

தீமைசெய்தல், ஒட்டி இருக்கும் நிழல்போல

தீயோரை ஒட்டிநிற்கும் தீங்கு.

குறள் 209:

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்

துன்னற்க தீவினைப் பால்.

தன்வாழ்வை வாழ நினைப்பவன்  தீயசெயல்

தன்னை விரும்பமாட்டான் செப்பு.

குறள் 210:

அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின்.

முரடன்தான்! கேடுசெய்ய வில்லையென்றால் தீமை

நெருங்கா தவர்க்கென்றே நம்பு


மதுரை பாபாராஜ்






























0 Comments:

Post a Comment

<< Home