Sunday, December 13, 2020

23 ஈகை

  குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்துகள்

23 ஈகை!

குறள் 221:

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

வறியோர்க்கு ஈதலே ஈகையாம்! இன்றிப்

பிறர்க்களித்தல் தன்னல மே.

குறள் 222:

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

பிறரிடம் வாங்குதல் நன்றன்று! ஆனால்

பிறர்க்கோ ஈதல் சிறப்பு.

குறள் 223:

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள

தனது வறுமையைக் காட்டாமல் ஈதல்

மனங்கொள்தல் என்றும் சிறப்பு.

குறள் 224:

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணு மளவு

இல்லையென்று வந்துநிற்போர் இன்முகம்  காணுமட்டும்

தொல்லைதான் ஈவார்க்கு! செப்பு.

குறள் 225:

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவா ராற்றலிற் பின்.

ஊன்பசி தாங்குகின்ற நோன்பினைக் காட்டிலும்

ஏழைக் குணவளித்தல் மேல். 

குறள் 226:

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.

மற்றவர் வன்பசி ஆற்றுவது சேர்த்துவைத்த

செல்வத்தை வைக்கும் இடம்.

குறள் 227:

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்

தீப்பிணி தீண்ட லரிது

வாழ்வில் பகிர்ந்துண்போர் தம்மைப் பசிநோயோ

நீண்ட தெருங்கா துணர்.

குறள் 228:

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

ஈயாமல் பொருளை இழப்போர், அறியாரோ

ஈவதன் இன்பத்தை இங்கு?

குறள் 229:


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமிய ருணல்.

பிறருக்கு ஈயாமல் சேர்த்துக் குவித்தல்,

இரத்தலை விஞ்சும் இழிவு.

குறள் 230:

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈத லியையாக் கடை.

சாதலின் துன்பத்தை விஞ்சும்  இயலாமை

வேதனைத் துன்பம் உணர்.


மதுரை பாபாராஜ்



























0 Comments:

Post a Comment

<< Home