25 அருளுடைமை
குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து
25 அருளுடைமை
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள்.
பெருஞ்செல்வம் கீழோ ரிடத்திலும் உண்டு!
அருட்செல்வம் ஒன்றே சிறப்பு.
குறள் 242:
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
பல்வழியில் ஆய்ந்தாலும் வாழ்வில் அருளுடைமை
நல்லதுணை என்றே சொல்.
குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அருள்மனம் கொண்டோர் அறியாமைத் துன்ப
இருளுலகில் வாழமாட்டார் சொல்.
குறள் 244:
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை.
இங்கே உயிரினத்தைக் காக்கும் கருணைகொண்டோர்
தன்னுயி ரஞ்சமாட்டார் சாற்று..
குறள் 245:
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.
துன்பம் அருளுடையார்க் கில்லை! காற்றுலாவும்
மண்ணுலகே சான்று நமக்கு
குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
அருளற்றுத் தீமை புரிந்தோர்
கடமை,
பொருளை மறந்தோராம் கூறு.
குறள் 247:
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.
பொருளில்லை இல்லறம் இல்லை! கருணை
பெருகாத் துறவறம் வீண்.
குறள் 248:
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
பொருளிழந்தால் மீண்டுவர வாய்ப்பிருக்கும்! ஆனால்
அருளிழந்தால் வாய்ப்பில்லை சொல்.
குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அறிவற்றோன் நூற்பொருள் காணான்! அதுபோல்
நெறியற்றோன் போற்றும் அறம்.
குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.
எளியோரைத் துன்புறுத்தும் நேரத்தில்
நம்மை
வலியோர் வதைப்பதை எண்ணு.
0 Comments:
Post a Comment
<< Home