Tuesday, December 15, 2020

26 புலால்மறுத்தல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

26 புலால்மறுத்தல்

குறள் 251:

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

தன்னுடலைத் தான்வளர்க்க மற்றோர் 

உயிருடலைத்

தின்போ னிடம்கருணை ஏது?

குறள் 252:

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.

பொருள்பயன் இல்லை! பொருள்காவா

தார்க்கு!

அருள்பயன் ஊன்தின்பார்க் கில்.

குறள் 253:

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்

உடல்சுவை யுண்டார் மனம்.

பகைமைக்(கு) இரக்கமில்லை! இறைச்சி

சுவைப்போர்

அகத்தில் கருணையில்லை சாற்று.

குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்ல தவ்வூன் தினல்.

பிறஉயிரைக் கொல்தல் அருளல்ல! 

வாழ்வில்

அறமல்ல ஊன்தின்னல்! சொல்.

குறள் 255:

உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யா தளறு.

உண்பதில்லை ஊனென்ற கொள்கை மனிதநேயம்!

உண்பவரைச் சூழ்ந்துவிடும் கேடு.

குறள் 256:

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

இறைச்சியைத்  தின்பதற்குக் கொல்வதில்லை என்றால்

இறைச்சிவிற்க ஆளில்லை சாற்று..

குறள் 257:

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ண துணர்வார்ப் பெறின்.

இறைச்சியோ வேறோர் உடலேந்தும் புண்ணே!

இதையுணர்ந்து உண்ணாமல் வாழ்.

குறள் 258:

செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

அறிவார்ந்த ஆன்றோர் உயிர்பிரிந்த மற்ற

இறைச்சியை ஏற்கமாட்டார் கூறு.

குறள் 259:

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

பொருளிட்டு வேள்வி படைத்தலினும் ஊனை

விருப்புடன் உண்ணாமை நன்று.

குறள் 260:


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.

கொல்லாமல் வாழ்வோனை ஊனை

மறுப்பவனை

இவ்வுலகம் சூழ்ந்து தொழும்


மதுரை பாபாராஜ்






















0 Comments:

Post a Comment

<< Home