முத்தொள்ளாயிரம் 8
முத்தொள்ளாயிரம்
சேரமன்னன் கோதைநை நாடிய மங்கையின் நிலை!
பாடல் 8
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன் – நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. – 8
-----------------------------------------------------------------
கவிதை
வேந்தனாம் கோதை உலாவந்தான்!
நானுடனே
காண்பதற்குச் சென்றேனா, நாணம் எனைத்தடுக்க
தாழிட்டேன் வீட்டுக் கதவை! வறுமையில்
வாடுவோர்
நாடித்தான் செல்வார்கள் செல்வந்தர் வீட்டுக்கு!
வீடுநோக்கி வந்திடுவார் மீண்டுமங்கே சென்றிடுவார்!
மாதெந்தன் நெஞ்சமும் இப்படித்தான் போய்வரும்
கோதையைக் காண விழைந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home