Monday, February 01, 2021

ராம்குமார் பிறந்தநாள்

 பண்பாளர் மனிதத்தேனீ 

ரா.சொக்கலிங்கம் --அலமேலு

இணையரின் மகன் 


பொறியாளர் ராம்குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து

02.02.2021

அடக்கமும் ஆர்வமும் இன்சொல்லும் ஈகை

உறவை அரவணைத்தல் ஊக்கம் எளிமை

திறமையால் ஏற்றங்கள் ஐந்துபேரை சேர்த்தல்

ஒழுக்கமுடன் ஓங்குபுகழ் ஔவைத் தமிழின்

எழுச்சிக்குப் பாடுபடல் போன்ற சிறந்த

கெழுதகைப்  பண்பால்   இராம்குமார் வாழ்க!

செழுந்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.


பெற்றோர் பெரியோரின் ஆசிகளுடன்

வாழியவே!

உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்திசைக்க

நற்றமிழ்போல் வாழ்வாங்கு வாழியவே

பல்லாண்டு!

முத்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home