முத்தொள்ளாயிரம் 15
முத்தொள்ளாயிரம்
பாடல்.15
களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற்
களிகள் விதிர்த்திட்ட வெங்கட் – துளிகலந்து
ஓங்கெழில் யானை மிதிப்பச்சே றாகுமே
பூம்புனல் வஞ்சி அகம். – 15
கள்ளருந்தி நாளும் களிமக்கள் வாழ்கின்ற
வஞ்சி நகரோ தலைநகராம் சேரனுக்கு!
கள்ளுண்ணும் மக்களுக்கு மொந்தையில் நீட்டுவார்!
சிந்துகின்ற கள்துளிகள் சாலையில் ஓடுமாம்!
அந்தத் துளிகளில் யானைசென்று சேறாகும்!
கள்வளம் மிக்கது சேரநாடு! மக்களோ
கள்ளின்பம் கொள்வார் களித்து.
மதுரை பாபாராஜ்
.
0 Comments:
Post a Comment
<< Home