தடகள வாழ்வு!
தடகள வாழ்வு!
கடமை உரிமை இரண்டுடன் வாழ்க்கைத்
தடகளப் போட்டியில் ஓடி முடித்துக்
கடமைகளை மட்டும் உரிமையின்றிச் செய்யும்
குடும்ப நடைமுறையில் தாய்தந்தை வாழ்வார்!
நடப்பதை வேடிக்கை பார்த்து.
சிறகிழந்து வாழும் பறவையும், நீரின்
சிறப்பின்றிப் போன நதியும், ஒளியை
இழந்தே தவிக்கும் விழியும், உரிமை
இழந்துவிட்ட பெற்றோரும் ஒன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home