பாட்டு
பாட்டு
என்னோட பாட்டுக்கு
ஆடுறது யாருடா
ஆட்டத்துக்கு ஏத்தமாதிரி
பாட்டொன்னு கூறுடா
பாட்டுவந்தா ஆட்டம்வரும்
ஆட்டம்வந்தா பாட்டுவரும்
எல்லோரும் பாடலாம்
எல்லோரும் ஆடலாம்
சாதிமதம் பார்ப்பதில்லை
உயர்ந்தவங்க தாழ்ந்தவங்க
வர்க்கபேதம் இங்கேஇல்ல
எல்லாரும் ஒண்ணுடா
சமத்துவ பூமிடா
மனிதன நெறத்தால
பிரிக்கத்தான் வேணாமே
நல்ல நல்ல பண்புகள
வளத்தாலே போதுமே
எல்லோரும் படிக்கணும்
எல்லோரும் உயரணும்
எல்லோருக்கும் எல்லாமே
தடையின்றி கிடைக்கணும்
பாட்டுவந்தா ஆட்டம்வரும்
ஆட்டம்வந்தா பாட்டுவரும்
எல்லோரும் பாடலாம்
எல்லோரும் ஆடலாம்
எல்லோருக்கும் வயிறு
ஒருசாண்தான் கேட்டுக்க
உழச்சிங்கே சாப்பிட்டாதான்
மகிழ்ச்சிபொங்கும் கேட்டுக்க
எல்லைகள மீறாம
வாழவேண்டும் பாரடா
எல்லைகள மீறினாக்கா
தொல்லைகள்தான் பாரடா
என்னோட பாட்டுக்கு
ஆடுறது யாருடா
ஆட்டத்துக்கு ஏத்தமாதிரி
பாட்டொன்னு கூறுடா
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home