Wednesday, December 01, 2021

சாதனை மங்கை



 


குறள்நெறியில் சாதித்த சாதனை மங்கை பழங்குடி மாணவி சங்கவிக்கு வாழ்த்து:

அரசளிக்கும் கல்வியைக் கற்றுத் தெளிந்தே
பழங்குடி மாணவி சங்கவி நாட்டில்
மருத்துவக் கல்விக்கு வெற்றி மதிப்பெண்
பெருமையுடன் பெற்றுவிட்டார் வாழ்த்து.

வீட்டில் அடிப்படைக் கட்டமைப்பே
இல்லாமல்
நீட்டுக்குத் தன்முயற்சி ஊக்கம் இருதுடுப்பாய்
போட்டேதான் நீந்திக் கரைசேர்ந்த சாதனையை
நாட்டிய நங்கையை  வாழ்த்து.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தருமென்றார் வள்ளுவர்!
மெய்ப்பித்த சங்கவியை வாழ்த்துவோம் பாராட்டி!
வல்லவரை வாழ்த்துவோம் சூழ்ந்து.

தந்தை மறைந்துவிட்டார்! தாயின் துணையுடன்
தன்முனைப்பால் நீட்தேர்வில் வெற்றிபெற்றாள்! தன்கனவு
இந்தச் சமுதாயச்  சூழலை மாற்றுவதே
என்றார் நிறைவேறும் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home