Thursday, December 02, 2021

இல்லறமே நல்லறம்!

 இல்லறமே நல்லறம்!


எரிமலை எல்லாம்  பனிமலை ஆகும்!

நிலநடுக்கம் மற்றும்  சுனாமி, புயலும்

கலக்கம் கொடுத்தே அமைதியாய் மாறும்!

இயற்கையைக் கண்டேன் வியந்து.


இல்லறத்தில் இந்த நிகழ்வுகளைப் போலவே

எல்லாம் நடக்கலாம்! எல்லாம் கடந்துவிடும்!

இல்லறத்தை விட்டேதான் ஓடுவது நல்லதல்ல!

இல்லறமே நல்லற மாம்.


நாட்டின் பருவநிலைக் கேற்பநாம்

வாழவேண்டும்!

நாட்டுக்கு நாடு பருவநிலை மாறுபடும்!

நாட்டைவிட்டே ஓடி ஒளிதலோ நல்லதல்ல!

வீட்டுக்கு வீடு அணுகுமுறை வேறுபடும்!

வீட்டில் அனுசரித்து வாழ்வதே வாழ்வாகும்!

வீட்டைச் சிதைப்பது கேடு.


மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home