Thursday, December 02, 2021

மெய்நிகர் ஆட்டங்கள் கேடு!


 மெய்நிகர் ஆட்டங்கள் கேடு!


AVOID ON LINE  GAME!


மெய்நிகர் ஆட்டம் சிறுவர், இளைஞர்கள்

எல்லோரும் ஆடுகின்றார்! மெய்மறக்கச் செய்துவிடும்!

உள்ளத்தில் பேராசை தோன்ற மேற்கொண்டு

மெய்நிகர் ஆட்டத்தை வாங்க செலவுவைக்கும்!

மெய்நிகர் ஆட்டம் தவிர்.


மெய்நிகர் ஆட்டமெல்லாம் சூதாட்ட மாகிவிட்டால்

பொய்சொல்லத் தூண்டும்! களவாடத்

தூண்டும்!

பிள்ளைக்கும் பெற்றோர்க்கும் வேற்றுமையை உண்டாக்கும்!

மெய்நிகர் ஆட்டங்கள் கேடு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home