Monday, January 03, 2022

எப்படி வாழ்வது?

 எப்படி நான் வாழ்வது?


இந்த வாழ்க்கை போதுமென்று

எந்தன் உள்ளம் சொல்லுதே 

எந்தன் உள்ளம் சொன்ன போதும்

இந்த வாழ்க்கை தொடருதே


நொந்து போன உள்ளமுடன்

எப்படி நான் வாழ்வது

வாழ்க்கை என்னைப் பார்த்துப் பார்த்து

வாழ்க வாழ்க என்றது


ஓடி ஓடி வந்து தேள்கள் 

பாய்ந்து கொட்டி ஓடுதே

சூழ்நிலைகள் தேள்க ளாக

மாறி மாறி கொட்டுதே


எனக்கு வாழ்க்கை இப்படியா ஆவது

ஆனவாழ்க்கை என்றெனக்கு எப்படித்தான் முடியுமோ


முடிந்துவிட்டால் நிம்மதிதான் உளைச்சலிங்கே இல்லையே

தொடர்ந்துவந்தால் உளைச்சல்தான்

வாழ்க்கையென்றும் தொல்லையே!


மதுரை பாபாராஜ்








0 Comments:

Post a Comment

<< Home