Saturday, June 10, 2023

திண்டுக்கல் விருந்தோம்பல்

 மருமகன் சரவணன்-- மகள் சித்ரா இல்லத்தின் விருந்தோம்பல்!


பேத்திகள்: 

தேஜஸ்வினி-- ஜோட்ஸ்னாஸ்ரீ


மகன்: பூபாலன் மருமகள் ரோகிணி


31.05.23--10.06.23


காலை குளம்பி சிறிதுநேரம் சென்றபின்

தேடிவரும் சிற்றுண்டி பின்பங்கே தேநீரும்

ஈடற்ற நண்பகல் சாப்பாடு மாலையில்

நாடிவரும் நல்ல குளம்பி, இரவிலே

தூதுவரும் சிற்றுண்டி தான்.


சித்ராவின் ஆற்றல்!


அடுக்களைக்குள் எப்போது செல்வார் சமையல்

தொடங்குவதும் தொட்டுத் தொடர்ந்து சமைத்து

முடிப்பதும் எப்போது என்றே கணித்தல்

கடினந்தான்! ஆனால் அனைத்துமே எந்தப்

பொழுதில் வரவேண்டும் அந்தப் பொழுதில்

தவறாமல் வந்துவிடும் செப்பு.


வள்ளுவர் சொன்ன விருந்தோம்பல் பண்புகளைத்

தெள்ளத் தெளிவாக கொண்டிருக்கும் சித்ராவை

உள்ளத்தால் வாழ்த்துகிறோம் இங்கு.


சரவணன் கடமை வீரர்!


தானுண்டு தன்வேலை உண்டென்று வீட்டிலே

காலைமுதல் நாளின் இரவு வரையிலே

மேசைமுன் உட்கார்ந்து தன்கடமை ஆற்றுகின்ற

வீரரான எங்கள் சரவணனைப் பார்த்தேதான்

பாராட்டும் காலந்தான் பார்.


தேஜு


காலந் தவறாமல் இங்கே அலுவலகம்

கூறும் கடமைகளைச் செவ்வனே செய்கின்றார்!

மேற்கொண்டு ஓவியம் தீட்டுகின்ற ஆற்றலும்

காட்டி மகிழ்கின்றார் காண்.


ஜோட்ஸ்னா


சித்து! எனஅழைக்கும் தேன்குரல் காதுகளில்

அற்புதமாய்க் கேட்கிறதே சென்னை நகரிலும்!

தொட்டுத் தொடர்கின்ற தோழியாய் தேஜுடன்

எப்போதும் பேசிச் சிரிக்கின்ற காட்சியினை

இப்போதும் எண்ணுகின்றோம் இங்கு.


பூபாலன்


கிடைக்காது இல்லை முடியாது என்ற

தடைச்சொற்கள் இல்லை இவரிடம்! செல்வார்

அனைத்தையும் செய்தேதான் புன்னகைப்பார் நாளும்!

மனங்கோணிப் பார்த்ததில்லை நாங்கள்தான் அங்கே!

அமைதி உருவம் இவர்.


ரோகிணி


முகத்தில் சிரிப்பு தவழ்ந்திருக்கும்! பேச்சில்

அகத்தில் கலகலப்பை உண்டாக்கிப் பார்த்து

நடைபோடும் தன்மை இவரிடம் உண்டு!

கடமையில் தென்றல் இவர்.


கூடிவாழ்ந்தால் கோடிநன்மை என்றிங்கே வாழ்கின்றார்!

ஈடில்லா வாழ்வில் மகிழ்கின்றார் நாள்தோறும்!

தேடிவரும் செல்வம் நிலையான செல்வமிது!

பாடிவரும் ஒற்றுமையைப் போற்று.


திண்டுக்கல் பத்துநாள்கள் எப்படிச் சென்றன?

அன்பு மழையில் நனைந்தோம்! கனிவுடன்

பண்பலையில் பேத்திகளின் நேச அரவணைப்பை

நன்றியுடன் வாழ்த்துகிறோம் நாம்.

மதுரை பாபாராஜ்

வசந்தா

மனம் நிறைந்த வார்த்தைகளைக் கண்டு கண்கள் வேர்க்கின்றன. பத்து நாட்கள் பத்து நிமிடங்களாகக் கடந்துவிட்டன. சட்டென்று வெறிச் சென ஆனது வீடு. மீண்டும் தங்கள் வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.🙏

மு.சரவணப் பெருமாள்

அருமை தாத்தா💖💖

ஜோட்ஸ்னா

🙏🙏🙏❤️❤️❤️ அருமையான வாழ்த்து நைநா எங்களுக்கும் 10 நாட்கள் போனதே தெரியவில்லை நீங்க எங்களோட இருந்தது சந்தோசம்❤️❤️

சித்ரா சரவணன்

Superb Mama

👏👏👏👏👏

Rohini

❤️❤️

Boobalan




0 Comments:

Post a Comment

<< Home