தென்காசி திருவள்ளுவர் கழக சிவராமகிருஷ்ணன் ஐயா
😭 *கண்ணீர் அஞ்சலி*😭
தெள்ளுத்தமிழ் நாட்டினிலே
தென்கோடி பகுதியிலே
தென்காசி பட்டணத்தில்
தேமதுரக் குறளோசை
தெருவெங்கும் பாய்ந்திடவே
தென்காசி திருவள்ளுவர்
கழகத்தில் தனையிணைத்து
சுழலும் சூரியனாய்
வள்ளுவத்தை உள்வாங்கி
வள்ளுவத்தால் ஆட்கொண்டு
குறள் நெறியை
அருள் நெறியாய்
மனத்துக்கண் மாசின்றி
இணக்கமாய் கொண்டுசென்று
ஆண்டாண்டு விழாயெடுத்த
*அருளாளர் அய்யா*
*சிவராம கிருஷ்ணன்*
சிறப்பான தொண்டாற்றி
அகவை தொண்ணூற்றுநான்கில்
அமைதியின் திருவுருவம்
ஆருயிர் நீத்து
ஆழ்துயில் கொண்டார்!
அய்யா ஆற்றிய
பொய்யா மொழியின்
நற்றொண்டை தொடர்ந்து
கற்கண்டாய் பணிசெய்து
அவரடி தொழுது
அவர்புகழ் போற்றுவோம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!
வீரவணக்கம் அய்யாவுக்கு!
கோ.இமயவரம்பன்
வள்ளுவர் குரல் குடும்பம்
09.06.2023
0 Comments:
Post a Comment
<< Home