மகிழ்ந்த தாய்!
ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்
தாய்!
அங்குமிங்கும் தேடிப் பாத்தேன்
மகன இன்னும் காணல
இருட்டாக இருக்குதடி
எங்க போனான் தெரியல
அனலாக கொதிக்குதம்மா
உள்ள போயி படுத்துரு
உன்பிள்ள வருவானே கவலவேண்டாம் வந்துரு
மூச்சிரைக்க பிள்ளவந்தான்
அம்மா முகத்துல சிரிப்புதான்
மடிச்சுவச்ச கைகளயே
பிள்ளயங்கு விரிச்சுப்புட்டான்
அம்மா உனக்கு மாத்திரைதான்
வாங்கப் போனேன் சாப்பிடுன்னான்
உச்சிமோந்து பிள்ளயத்தான் முத்தமிட்டாள் அம்மாதான்
அக்கறைய பாத்தேதான் மெய்சிலிர்த்து நின்னிருந்தா!
அக்கம் பக்கம் வியப்பாக
கூடிநின்னு பாத்தாங்க
கொடுத்து வச்ச தாயின்னு
பாராட்டிப் போனாங்க!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home