Tuesday, August 15, 2023

மூவண்ணம் நடுவில் சக்கரம்


மூவண்ணம் நடுவில் சக்கரம்!

தியாகத்தைச் சொல்வதற்கு செவ்வண்ண மானேன்!
நியாயமான உண்மைக்கே வெண்ணிற மானேன்!
வளமான இந்தியாவே பச்சைவண்ண மானேன்!
தளமான ஒற்றுமைக்கே சக்கர மானேன்!
தளமான கொள்கை வடித்துத்தான் தந்தேன்!
வழிகாட்டு கின்றேன்! வழிமாறிப் போனால்
பழியெந்தன் மீதா? செயல்வீரர் மீதா?
அலைபாயும் உள்ளமின்றி எல்லோரும் ஒன்றாய்
உளங்கொண்டே வாழ்ந்தால்தான் வேற்றுமை இன்றி
தலைநிமிர்ந்து நிற்கலாம் சாற்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home