எனது கவிதைகளின் பின்னணி
எனது கவிதைகளின் பின்னணி!
கண்டதையும் பாவியற்றும் எண்ணமில்லை! கண்களோ
கண்டதில் உள்ளம் கவர்கின்ற காட்சிகள்
இன்பங்கள் துன்பங்கள் வாழ்வின் அனுபவங்கள்
எண்ணத்தில் உந்துதலை ஏற்படுத்திப் பார்ப்பதால்
உண்டாகும் என்கவிதைள் இங்கு.
அறவுரைகள் கூறும்! மொழிபெயர்ப்பை ஏந்தும்!
சிறப்பாக வாழ்த்துப்பா தேடிவரும்! மேலும்
பிறந்தநாள் வாழ்த்துகள் பாடிவரும்! இந்த
முறைகளில் பாமலரும் இங்கு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home