தேவையற்ற ஒப்பீடு
தேவையற்ற ஒப்பீடு!
காலகட்டச் சிந்தனைகள் நாள்தோறும் மாறிவரும்
நேரத்தில் பின்னோக்கிப் பார்த்தேதான் அக்காலம்
வாழ்ந்திருந்த வாழ்க்கை முறைகளை ஒப்பிட்டு
காலக் கொடுமையெனச் சொல்லிப் பெருமூச்சில்
வாழ்வதும் ஏனென்று கூறு?
சென்றது சென்றதுதான்! வந்ததை ஏற்றேதான்
நம்வாழ்வை மாற்றவேண்டும்! மாற்றமொன்றே மாறாது!
நன்முறையில் மாற்றத்திற் கேற்பநாம் மாறவேண்டும்!
முன்னேற்றம் மாற்றத்தில் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home