பற்றாக்குறை நல்லதல்ல!
பற்றாக்குறை நல்லதல்ல!
சமையல் அறையில் அனைத்துப் பொருளும்
நிறைவாய் இருந்தால் சமைப்போரும் நன்றாய்
சமையலைச் செய்வார்கள்! பற்றாக் குறையில்
பொருளிருந்தால் என்செய்வார் சொல்?
அப்படித்தான் இல்லறமும்! சண்டையும் சச்சரவும்
விட்டுக் கொடுக்கின்ற பண்புமின்றி நற்பண்பே
பற்றாக் குறையென்றால் சீரழியும்
இல்லறம்!
பெற்றோர் பொறுப்புணர்தல் நன்று.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home