என்னமோ வாழ்க்கை?
என்னமோ வாழ்க்கை!
எத்தனையோ பேர்களைநாம் சந்தித்த போதிலும்
அத்தனை பேர்களும் நண்பராவ தில்லையே!
யாரிங்கே யாரோடு நண்பராக வேண்டுமென்று
காலம் கணிக்கிறது சொல்.
அப்படி இங்கே அமைந்தவரின் நட்பிழையும்
தொய்வின்றி நாளும் தொடருமா இவ்வுலகில்?
இங்கிருப்போர் எங்கிருப்பார்? என்றும் தெரியாது!
என்னமோ வாழ்க்கை இது!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home