பண்பாளர் வேணுகோபால்
பண்பாளர் வேணு!
கெட்ட பழக்கம் எதுவுமே இல்லாத
நட்புடைய நண்பராம் வேணுகோபால் இன்றிங்கே
தொட்டால் வலிக்கும் ரணத்துடன் வாழ்கின்றார்!
புற்றுநோய் வாயிலாம் கேள்.
புன்சிரிப்பு ஆழமான நற்கருத்து தன்பணியில்
என்றும் கடமை உணர்வுடன் அர்ப்பணிப்பு
என்றேதான் வாழ்ந்தவர் புண்பட்டே வாழ்கின்றார்!
நண்பர் குணமடைய வேண்டும் விரைந்தேதான்!
பண்பாளர் வேணென்றே சொல்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home