பூனைக்கு சிகிச்சை!
பூனைக்கு சிகிச்சை!
(அபி-- வருண்-- நிகில்)
மூன்றுநாளாய்ப் பூனையைக் காணவில்லை! நாங்களும்
காணாமல் போனதென்றே எண்ணி வருத்தமுற்றோம்!
ஊன்ற முடியாத காலுடன் இன்றிங்கே
பாவம்! படியேறி மூடிய வாசலிலே
காயமுடன் கத்தியே நிற்க வருணதைப்
பார்த்தே இரக்கமுடன் உள்ளெடுத்து வந்துவிட்டான்!
பார்த்தே அபியும் நிகிலும் வருணுடன்
மூவரும் காயத்தைக் காட்ட மருத்துவரை
நாடியே சென்று சிகிச்சை எடுத்துவந்தார்.!
பூனையும் நம்மைப்போல் ஓருயிர் தான்வாழ்வில்!
மூவரும் வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home