குறுந்தொகை. 3
குறுந்தொகை
பாடல் 3-
தேவ குலத்தார்
நட்பின் தன்மை
குறிஞ்சி - தலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர்ரள வின்றே- சாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
-----------------------------------------------------------------------------------------------------
களவொழுக்கம் விட்டுக் கடிமணம் செய்யத்
தலைவன் தயங்கலாமோ? கோழைத் தலைவன்!
தலைவியோ தோழியைப் பார்த்தேதான் எங்கள்
கலைநட்பு மண்ணகத்தை விஞ்சியது!விண்ணை
அளக்கும் உயரமாகும்! ஆழிக்கும் ஆழமாம்!
மலைநீரை விஞ்சிடும் தூய்மைதான்! தோழி!
மலைத்தேனீ தேனெடுத்துக் கூடுகட்டும் பண்பு
நிலைபோல் தலைவன் மணமுடித்தே என்னைத்
தலைவனில்லம் கொண்டுசெல்வான் பார்

0 Comments:
Post a Comment
<< Home