மன்னரைச் சேர்ந்தொழுகல் -- 70
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
மன்னரைச் சேர்ந்தொழுகல் -- 70
----------------------------------------------------------------
குறிப்பறிந்து பழகுதல் பழக்கத்திற்கு அழகு!
----------------------------------------------------------------
நெருப்பின் முன்னே குளிர்காயும்
நிலைபோல் எல்லை அறிந்தேதான்
சான்றோ ரிடத்தில் பழகவேண்டும்!
சான்றோர் நாடி விரும்புவதை
சார்ந்தோர் தவிர்த்தல் பயன்தருமே!
நம்மேல் ஐயம் கொள்ளாமல்
நடப்பது நல்லது! வந்துவிட்டால்
மனதை மாற்ற முடியாது!
பிறருடன் பேசுதல், சிரிப்பதையோ
சான்றோர் முன்னே தவிர்க்கவேண்டும்!
அவர்கள் பேசும் இரகசியத்தை
ஒட்டுக் கேட்கக் கூடாது!
அவராய்ச் சொன்னால் கேளுங்கள்!
விருப்பு வெறுப்பை நன்கறிந்து
என்றும் சொல்லுதல் நல்லதுதான்!
பெரியோர் விரும்பும் செய்திகளை
சொல்லத் தயங்கக் கூடாது!
வெறுக்கும் செய்தியைக் கேட்டாலும்
சொல்லத் துள்ளக் கூடாது!
வயதில் இளையோர், உறவினர்தான்
என்றே இகழ்ந்து பேசாமல்
தகுதிக் கேற்ப மதிக்கவேண்டும்!
நெடிய தொடர்பு உண்டென்று
செய்யக் கூடா செயல்களைத்தான்
உரிமை யோடு செய்திட்டால்
உழல்வார் நாளும் துன்பத்தில்!
0 Comments:
Post a Comment
<< Home