Thursday, March 26, 2026

தூது-- 69

 திருக்குறள் குழந்தைப் பாடல்

---------------------------------------------------------------

    தூது-- 69

----------------------------------------------------------------

நாட்டையும் மக்களையும் ஆற்றலுடன் காப்பதே தூது!

----------------------------------------------------------------

அன்பு பண்பு குடிப்பிறப்பு

தூது செல்வோன் தகுதிகளாம்!


அன்பு அறிவு சொல்வன்மை

தூதுக் குரியோன் பண்புகளாம்!


தனது நாட்டின் வெற்றிக்கு

வேற்று நாட்டுத் தலைமையிடம்

கருத்தைத் தெளிவாய் உணர்த்துவதே

தூதுச் செயலின் இலக்கணமாம்!


தோற்றம் கல்வி அறிவாற்றல்

இவையே தூதரின் முத்திரையாம்!


தொகுத்தும் நீக்கியும் செய்திகளை

பகுத்துச் சொல்லும் ஆற்றலுடன்

நாட்டைக் காப்போன் தூதன்தான்!


கற்றுத் தெளிந்தே அஞ்சாமல்

கருத்தை உரைத்துக் காலத்தை

அறிந்தே தூதன் செயல்படுவான்!


கடமை காலம் அறிந்தேதான்

இடத்தையும் சொல்பவன் தூதனாம்!


ஒழுக்கம் வலிமை துணிவென்னும்

மூன்றும் உடையவன் தூதுரைப்பான்!


போகும் இடத்தில் அஞ்சித்தான்

தலைவன் கூறிய செய்திகளைத்

தவறியும் தவறாய்க் கூறாமல்

சொல்லும் பண்பே தூதாகும்!


தனக்கு அழிவே நேர்ந்தாலும்

நட்டுக் காக நன்மைகள்

தருவதைச் சொல்பவன் தூதன்தான்!


0 Comments:

Post a Comment

<< Home