Saturday, March 28, 2026

வசந்தா கவிதைகள்!

 வசந்தா கவிதைகள்!

22.07.75 2.25 pm

துயரத்தின் எல்லையில்!


பனிபடர்ந்த பாதையிலே

வீட்டுக்குள் பாதையின்றி பாங்குடனே

என்மனக் கோவிலைத் திறந்து வைத்தேன்!

உருகிவிட்ட மெழுகினிலே ஒளியேது?

உடைந்துவிட்ட சிலையினிலே அழகேது?

நானொரு உடைந்த கப்பல்!

சொல்லியதை நம்பவும் மனமில்லையா?

நானழுதேன் தேற்றவும் துணியவில்லை!

ஆனவரை சொல்லி விட்டேன்

அழுதழுது பார்த்து விட்டேன்

தாய் மொழியில் வார்த்தையில்லை!

வாய் மொழிக்கும் வலிமையில்லை!

எந்தன் வழக்கில் சாட்சி இல்லை!

என் பக்கம் யாருமில்லை!

இறைவா தலைவா என்மீது குற்றமா?

மரணம் வந்தால் தெரிந்துவிடும்

நல்லவர் யாரென புரிந்துவிடும்

ஊர்சுமந்து போகும் போது

உங்களுக்கும் கூட விளங்கிவிடும்!


11.06.75. 6.15 pm

அழகுமலர் ஒளியிலே!


எண்ணத்தை ஏடாக்கி உள்ளியதை வண்ண

ஓவியமாக்கி இதயத்தை அன்புமதுக் கிண்ணமாய்

ஏந்தியவளாய் வந்துநான் தலைவனின்  உள்ளக்

கோவிலிலே ஏற்றிவைத்த சுடர் விளக்காய்

எஞ்ஞான்றும் நந்தா விளக்காய் நயத்துடன்

விளங்கவே நல்லவளும் விரும்பு கிறேன்!

கண்ணனின் மணி வண்ணனின் நாயகனின்

அன்பு ஒளி என்மீது நீங்காது வீசவே

நானும் ஒளியில் மிளிரும் மலரானேன்!


0 Comments:

Post a Comment

<< Home