சிலைகளுக்ககு மரியாதை செலுத்துவோம்
சந்தடிகள் நிறைந்திருக்கும் சந்தை முன்னால்
சந்துகளோ கூடுகின்ற முனையில் மற்றும்
கண்டபடி வாகனங்கள் ஓடும் கோட்டில்
கடைத்தெருவில் நடுத்தெருவில் எல்லாம் நாட்டில்
பண்பாட்டுச் சின்னமான சிலைகள் தம்மை
பரவலாக நிறுத்திவைத்தால் பொறுப்பு யாரோ?
கண்ணெதிரே பறவைகள் எச்சம் இட்டே
கறைப்படுத்தும் களங்கத்தைப் பார்த்தே நிற்போம்!
வரலாறாய் வாழ்ந்தவர்கள் சிலைக ளாக
வடிவங்கள் பெற்றால்தான் நாமும் நாட்டின்
வரலாற்று நாயகரை உணர்ந்து கொள்வோம்!
மறுக்கவில்லை! அதற்காக முறைகள் இன்றி
பலவாறாய் நிற்கவைத்தல் தேவை தானா?
பண்பட்ட அறிஞர்கள் கலந்து பேசி
சிலைவைக்க வரைமுறையை வடித்துத் தந்தால்
சிலையாலே சிக்கலின்றி அமைதி கிட்டும்!
அந்தந்த அமைப்புகளின் வளாகத் திற்குள்
அன்புடனே சிலைநிறுவிப் பராம ரித்தால்
எந்தவொரு வன்முறைக்கும் இடமே இல்லை!
இதயத்தில் நேசமுடன் வணங்க லாமே!
இன்பமுடன் திருவிழாவை வீட்டுக் குள்ளே
இயல்பாகக் கொண்டாடும் நிலையைப் போல
பண்பாட்டின் சின்னமான பெரியோ ருக்குப்
பக்குவமாய் மரியாதை செலுத்த லாமே!
1 Comments:
//அந்தந்த அமைப்புகளின் வளாகத் திற்குள்
அன்புடனே சிலைநிறுவிப் பராம ரித்தால்
எந்தவொரு வன்முறைக்கும் இடமே இல்லை!
இதயத்தில் நேசமுடன் வணங்க லாமே!
இன்பமுடன் திருவிழாவை வீட்டுக் குள்ளே
இயல்பாகக் கொண்டாடும் நிலையைப் போல
பண்பாட்டின் சின்னமான பெரியோ ருக்குப்
பக்குவமாய் மரியாதை செலுத்த லாமே!//
மதுரை பாபாராஜ் அய்யா,
நியாயமாக கவிதையிலே சொல்லியிருக்கீங்க. ஆனா பகுத்தறிவு கழக பாசறையிலே, சிலை வக்கிறது,பெட்ரோல் குண்டு வீசுவது,ஹோட்டல் பிரசாதத்துக்கு அலைந்து aids எப்படி வரவழைத்துக் கொள்வது போன்ற நல்ல விஷயங்களை மட்டும் சொல்லிக்குடுப்பாங்க.நம்ம குஞ்சுகளும் தமிழர் தந்தை காட்டிய வழியில் கேவலமாக நடந்து, நாட்டுக்கே முன்னோடியா திகழ்வாங்க.
பாலா
12:37 AM
Post a Comment
<< Home