Friday, December 26, 2008

பாரதி எங்கே

பாரதி எங்கே?
(மகாகவி பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம்)
11.12.2001 சென்னை
===============================================
முழுத்தலைப் பாகை எங்கே?
முறுக்கிய மீசை எங்கே?
செழுந்தமிழ்ச் சொற்கோ எங்கே?
சிந்தனைச் சுரங்கம் எங்கே?
எழுச்சியின் வேந்தன் எங்கே?
எரிமலைக் கவிதை எங்கே?
பழமையை எரிப்போன் எங்கே?
பாரதி கவிஞன் எங்கே?

பெண்களை அடிமை யாக்கும்
பித்தரை உமிழ்ந்தே நிற்பான்!
இந்தியத் தாயின் வீட்டை
இடிப்பதைத் தூற்றிக் காப்பான்!
மண்ணக மூட எண்ணம்
மறைந்திட முழங்கி நிற்பான்!
பொன்னொளி வீசி இங்கே
புதுமையைப் படைத்து நிற்பான்!

இன்றவன் இல்லை! ஆனால்
எழுதிய கருத்துப் பாக்கள்
என்றுமே வாழும் இங்கே!
இந்திய நாடே! உந்தன்
தன்னலக் கனவை விட்டுத்
தமிழ்க்கவிக் கனவை நாட்டில்
உண்மையில் செயலாய் மாற்று!
உலகமே வணங்கும் உன்னை!

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home