மகனே நீ பாடு!
சாதிக் குரங்கு தாண்டவ மாடிச்
சண்டை மூட்டுதடா!
நீதிப் பூக்கள் தரையில் உருண்டு
நித்தம் கசங்குதடா!
சாதிப் பேதம் இல்லா உலகைச்
சமைக்க வேண்டுமடா!
ஊது சங்கை உணர்ச்சி யோடு!
உண்மை வெல்லுமடா!
அந்தோ! நமது இந்தியத் தாயின்
அழுகை கேட்கிறது!
வெந்த புண்ணில் வேலைச் செருகும்
வேலை நடக்கிறது!
சொந்த நாட்டின் சோகம் நெஞ்சில்
சோர்வைத் தருகிறது!
பண்புத் தேரின் அச்சை முறிக்கும்
பாதகம் தெரிகிறது!
உண்மை அன்பும் பொய்மைத் தேரில்
படரத் துடிக்கிறது!
கண்ணும் கையும் பகைவர் போலக்
காட்சி அளிக்கிறது!
மண்ணில் இவற்றை வென்று நிமிர
மகனே நீ பாடு!
மதுரை பாபாராஜ்
2002
0 Comments:
Post a Comment
<< Home