Friday, December 26, 2008

வீடுண்டு விளக்கில்லை

குடிப்பழக்க எரிமலையில்
குடியிருக்கும் குடிமகனே !
கொடிகட்டிப் பறக்குதடா
குடும்பத்தின் தன்மானம்!

நடுத்தெருவில் அலைகின்றாய்!
நாதியற்றுக் கிடக்கின்றாய்!
படையெடுக்கும் வறுமைக்குப்
பாய்போட்டு வரவேற்பா?

கூடுதனைப் பிரித்தெறியும்
குரங்குமனக் குடிவெறியை
நாடுகின்ற நிலையேனோ?
நாசவலை உறவேனோ?

கேடுகெட்ட குடிபோதை
கெடுமதியின் வழிச்செல்லும்!
வீடிருந்தும் விளக்கற்ற
வெறுமைக்கே வழிகாட்டும்!

மதுரை பாபாராஜ்
(புஷ்கின் இலக்கியப் பேரவைக் கவிதைப் போட்டியில்
மூன்றாம் பரிசுபெற்ற கவிதை -- 30.11.90 )

0 Comments:

Post a Comment

<< Home