Thursday, December 25, 2008

கடமையே கடவுள் குடும்பமே கோயில்

கடவுளை வணங்கிக் கொண்டு
கயமையில் உள்ளம் துள்ளும
மடமையைச் செய்ய வேண்டாம்!
மனிதனுள் மிருகம் வேண்டாம்!

நடுங்கிட வைக்கும் வண்ணம்
நாளெலாம் துரோகம் செய்து
தடம்புரண் டேதான் வாழ்வோர்
தாழ்ந்தவர் ஆவார் நெஞ்சே!

கடவுளை வணங்கி னாலும்
கடவுளை ஒதுக்கி னாலும்
கடமையை மறவா நெஞ்சைக்
கடவுளே ஏற்பார் உண்மை!

குடும்பமே கோயில் என்று
கூடியே வாழ்ந்தால் போதும்
கடவுளைத் தேட வேண்டாம்!
காவியும் கட்ட வேண்டாம்!

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home