Thursday, December 25, 2008

பகுத்தறிவுப் பகலவனே

பட்டிதொட்டி இடமெல்லாம்
பம்பரமாய்ச் சுழன்றேதான்
முற்போக்கு எண்ணத்தை
முழுமூச்சாய் விதைத்திருந்தாய்!

பகுத்தறிவுக் கொவ்வாத
பழமைக்கு விடைகொடுத்து
அகத்தினிலே புதுமையினை
அரவணைக்க வேண்டுமென்றாய்!

சாதிமத வெறியாட்டம்
சமத்துவத்தை முறித்துவிடும்!
வேதனைக்குக் கொடிபிடிக்கும்!
வேற்றுமையை வளர்க்குமென்றாய்!

தன்மான மனிதனாகத்
தனிமனிதன் வாழ்வதற்கு
எந்நாளும் பகுத்தறிவை
ஏற்பதற்கு வழியுரைத்தாய்!

பகுத்தறிவுப் பகலவனே !
பார்போற்றும் பெரியாரே!
மகத்தான உன்தொண்டின்
மகத்துவத்தை வணங்குகின்றோம்!

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home