Wednesday, December 24, 2008

ஒழுக்கமே உரைகல்

பழமைக்கும் புதுமைக்கும்
பலமுனையில் போராட்டம்!
அழிவென்றும் ஆக்கமென்றும்
ஆர்ப்பரிப்பின் ஊர்வலங்கள்!
விழியென்றும் வேலென்றும்
வீடுதோறும் கருத்தரங்கம்!
இழிவென்றும் இயல்பென்றும்
இருநிலையில் உரையாடல்!

இருக்கின்ற பழமையொன்றே
எழுச்சிஎன உரைப்பதுவும்
வருகின்ற புதுமைதான்
வளமென்று வாழ்த்துவதும்
இருட்டுக்குள் தள்ளிவிடும்!
ஏமாற்றப் புயல்வீசும்!
கரையுடைய மாற்றத்தைக்
கனியவைத்தல் கடமையாகும்!

ஒருமித்த கருத்துக்கள்
உருவாக்கும் நிலையெடுப்பொம்!
தரமான எதிர்காலம்
தழைத்தோங்க வகைசெய்வோம்!
சரியான சமத்துவத்தை
சமைப்பதற்கு விதிவகுப்போம்!
உரைகல்லாய் ஒழுக்கத்தை
உள்ளத்தில் பதியவைப்போம்!

மதுரை பாபாராஜ்
1997

0 Comments:

Post a Comment

<< Home