தியாகச் செம்மல் காமராஜர்
இந்தியாவின் மூலையிலே விருது பட்டி
என்றவொரு கிராமத்தில் பிறந்த ராஜன்!
பண்பகமாய்ப் படிப்படியாய் வளர்ந்து வந்து
பாரதத்தின் அரசியலின் ஆணி வேராய்
பண்பட்ட பெருந்தலைவர் சிறந்து நின்றார்!
பாரதத்தாய் பெருமையுடன் நிமிர்ந்து நின்றாள்!
இந்தியாவின் தலைவர் யார் என்ற கேள்வி
எழுந்தநேரம் விடைசொன்னார் காம ராஜர்!
உண்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக் காட்டு!
உயர்வான பண்புகளின் சான்றுச் சீட்டு!
மண்ணகத்தில் ஏழைகளின் விடியல் பாட்டு!
வஞ்சகமே இல்லாத தென்றல் காற்று!
தன்னலத்தின் சுவடறியா தியாகச் செம்மல்!
தரமான அரசியலின் தலைமைச் சான்றோன்!
பொன்வேண்டாம்! பொருள்வேண்டாம் என்றே வாழ்ந்தார்!
புவியரங்கில் இந்தியாவின் புகழைக் காத்தார்!
மதுரை பாபாராஜ்
2002
0 Comments:
Post a Comment
<< Home