Thursday, December 25, 2008

தொடுவான வர்க்கம்

மாதத்தின் முதல்வாரம் மகிழ்ச்சி வாரம்!
மாதத்தின் மறுவாரம் சுழற்சி வாரம்!
மாதத்தில் அதற்கடுத்து வறட்சி வாரம்!
மாதத்தின் கடைசி வாரம் முயற்சி வாரம்!

சோதனையும் வேதனையும் வாழ்க்கைத் தேரை
சோர்வுடனே இழுத்தேதான் செலுத்தச் செய்யும்!
சாதனையாய் மாற்றியிங்கு நிமிரும் போது
சக்கைபோல் மாறியதை முதுமை கூறும்!

அடுத்தடுத்துத் தேவைகளோ கதவைத் தட்டி
அனுதினமும் போட்டிபோட்டு நிற்கும் போது
நடுத்தரத்தில் வாழ்கின்ற வர்க்கத் தாரின்
நடனங்கள் விதவிதமாய் அரங்கில் ஏறும்!

சுடுமணலில் நின்றேதான் துள்ளித் துள்ளித்
துடிக்கின்ற நிலையினிலே இவர்கள் எல்லாம்
நடுத்தெருவின் நாயகராய் வாழ்ந்தி ருப்பார்!
நடைமுறையில் தொடுவானம் அளந்திருப்பார்!

மதுரை பாபாராஜ்
2002

0 Comments:

Post a Comment

<< Home